2024 டிசம்பர் 01ஆம் திகதி அதிகாலை 05.00 மணிக்கு வெளியிடப்பட்டது.
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த “Fengal” “பெங்கல்” என்ற புயலானது, நவம்பர் 30ஆம் திகதி முற்பகல் 08.30 மணியளவில் திருகோணமலைக்கு வடக்காக ஏறத்தாழ 420 கிலோ மீற்றர் தூரத்திலும் காங்கேசந்துறைக்கு வடக்காக ஏறத்தாழ 290 கிலோ மீற்றர் தூரத்திலும் நிலை கொண்டிருந்தது. இத் தொகுதி மேற்கு - வடமேற்குத் திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் நவம்பர் 30ஆம் திகதி மாலையலளவில் ஒரு சூறாவளியாக வட தமிழ்நாடு – புதுச்சேரி கரையைக் கடக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதி இந்தியாவினுள் நுழையும் போது வலுவிழக்கும் என்பதுடன், நாட்டின் வானிலையில் இத் தொகுதியின் தாக்கம் மேலும் குறைவடைகின்றது.
வடக்கு மாகாணத்தில் மேகமூட்டமான வானம் காணப்படுவதுடன் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.